வெற்றி நடை போட இந்த புத்தாண்டை வரவேற்போம்

முடியும் முடியும்
என்று சொன்னால்
உன்னால் முடியும் பாரடா !!

உண்மை உழைப்பு
ஊக்கம் உயர்வை
உணர்ந்து நீயும் பாரடா !!

அதிர்ஷ்டம் நம்பி
தினமும் வெம்பி
கரையேர நீ காத்திருந்தால்..

காலம் உன்னைக்
கொன்று விடும் - இது
ஞாலம் கண்ட உண்மையன்றோ !!

இன்பம் துன்பம்
இரண்டையும் ரசிக்கும்
இதயத்தை நீ பெற்றிடுவாய் !!

கோபம் என்னும்
கொடிய விஷத்தை
முழுமையாகக் கொன்றிடுவாய் !!

மரமாய் விலங்காய்
மண்ணில் மட்கிடவா
மானிடா நீயும் அவதரித்தாய்?

ஆறறிவு உடைய
மனிதா இதை
உணர்ந்தால் உனக்கே வெற்றியன்றோ !!

நம்பி கை வை
நம்பிக்கை வை !!
நிச்சயம் நமக்கே வெற்றியன்றோ !!


நன்றி: PositiveRAMA

வெற்றி நடை போட இந்த புத்தாண்டை வரவேற்போம் !!

அகிலத்தின் அனைத்து நெஞ்சங்களுக்கும் எனதருமை தமிழ் உள்ளங்களுக்கும் என் இதயம் நிறைந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்!


- தமிழ்குமார்

0 கருத்துக்கள்: