டாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தியின் எண்ணங்கள்
முன்னுரை:
" தேடி சோறு தினம் தின்று
பல சின்னஞ்சிறு கதைகள் பேசி
மனம் வாடி துன்பம் மிக உழன்று
பிறர் வாட பல செய்கை செய்து
நரை கூடி கிழப்பருவம் எய்தி
கொடும் கூற்றுக்கு இரையாகி மாயும
சில வேடிக்கை மனிதரை போலவே
நானும் வீழ்வேன் என்று நினைத்தாயோ?! "
மகாகவியின் இப்பாடல் வரிகளே இந்த " எண்ணங்கள் " பதிவின் தொடக்கத்திற்கு தூண்டுதலாக அமைந்தது.
நம் மக்கள் பல துறைகளில் வல்லவர்களாக இருந்தும் தொண்றுதொட்டு பல அறிய நூல்களை வழங்கிய போதும் ஏன் நம்மவரால் இன்றைய சூழலில் , மேற்கத்திய நாடுகளை போல் முன்னேர முடியவில்லை ? என்று நான் சிந்தித்ததுண்டு. இதற்கு காரணம் வறுமையா ? மக்கள் தொகை பெருக்கமா ? நிலை இல்லா அரசியலா ?? சிந்தித்தேன் . நமது சமுதாயத்தில் பலர் வாழ்வை ஓர் குறிக்கோள்,லட்சியம் இப்படி எதுவும் இன்றி வாழ்கையை ஒரு நீரோட்டமாக எண்ணுகின்றனர். இதனால் மக்களுக்கு நம்பிக்கையற்ற,கைவிடப்பட்ட நோய் கொண்ட மனநிலை ஏற்பட்டுள்ளது என்பதை காண்கிறேன்.
இவையனைத்தும் எண்ணச்சீர்கேடுகளின் தாக்கங்களே என்பதை திருவாளர் டாக்டர் எம்.எஸ் .உதயமூர்த்தி எழுதிய " எண்ணங்கள் " நூலை படித்தபின்பே உணர்ந்தேன். எண்ணங்களே மனிதகுல உயர்வின் மூலம் என்பதை அனைவரும் அறியவேண்டும் என்பதே இப்பதிவின் அவா।அதன் பொருட்டே டாக்டர் எம்.எஸ் .உதயமூர்த்தி அவர்களின் ஒப்பற்ற படைப்பை இங்கு விரிவாக தங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்.இப்பதிவு உங்களது வாழ்கைக்கு ஒரு பிடிப்பினயும்,படிப்பினையும் தரும் என்று நம்புகின்றோம்.
எண்ணங்கள் புத்தகத்தின் ஒவ்வொரு தலைப்பையும் ஒலி பதிவுகளாக (MP3 - Audio) இந்த வலையில் வெளியிட்டுள்ளோம்.
நீங்கள் அதை இங்கேயே கேட்டு மகிழலாம் அல்லது இங்கே
http://www.esnips.com/web/UdayamurthyCollection
சென்று இறக்கி (Download) கொள்ளலாம்.
விரைவில் புத்தகத்தின் அனைத்து பகுதிகளும் வெளியிடபடும்.
12:44
|
விவரக் குறிப்புகள்:
முன்னுரை
|
0 கருத்துக்கள்:
Post a Comment